திருப்போரூர் மேலைக்கோட்டையூர், தேவி கருமாரியம்மன் கோவிலில்,ஆடிப்பூரம்
திருப்போரூர் : மேலைக்கோட்டையூர், தேவி கருமாரியம்மன் கோவிலில், 33ம் ஆண்டு, ஆடிப்பூர கூழ்வார்த்தல் விழா மற்றும் 23ம் ஆண்டு தீ மிதி விழா விமர்சையாக நேற்று (ஆக., 4ல்) நடந்தது.கேளம்பாக்கம் அடுத்த, மேலைக்கோட்டையூரில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், இந்தாண்டு, 33ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. விழாவைஒட்டி, காலை, 8:00 மணிக்கு, பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து, பால்குட அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, தேர் வீதியுலா நடந்தது. இதில், பக்தர்கள் மாட்டு வண்டி, மினிவேன்களை இழுத்தனர். மெய்சிலிர்க்க மூன்று கிரேன் இயந்திரத்தில் தொங்கி யபடி வந்தனர். உடல் முழுவதும் எலுமிச்சைப்பழம் சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர்.பின், கூழ் வார்த்தலும் நடந்தது.
பிரதான விழாவான தீ மிதி விழா, மாலை, 6:30 மணிக்கு நடந்தது. ஆடிப்பூர விழாவை ஒட்டி சிறப்பு நாடகத்திற்கும் ஏற்பாடு செய்தனர்.விழா ஏற்பாடுகளை கருமாரியம்மன் கோவில் திருப் பணிக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.