உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கர லிங்கம் கோவிலில் ஆடிப் பூரம் சிறப்பு பூஜை

தும்பைப்பட்டி சங்கர லிங்கம் கோவிலில் ஆடிப் பூரம் சிறப்பு பூஜை

மதுரை   மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம்  கோவிலில் 03.08.2019 ஆடிப் பூரத்தை முன்னிட்டு, ஆடி  மாதம் 18-ம் நாள்  அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம்  சுவாமி,  சங்கர நாராயணனர் கோவிலில் ஆடிப் பூரம் சிறப்பு பூஜைகள்,  அலங்காரம் நடைபெற்றது.     

அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து சிறப்பு அலங்கார வழிபாடு,  அர்ச்சனை நடைபெற்றது.

காலையில், நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், தேவ தாஸ்,  செல்வம்,  ராசு, பாண்டி, அங்கப்பன், சுந்தரரராஜன், மோகன்தாஸ், உள்ளிட்ட விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !