கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவிலில் ஆடி பூரம் சிறப்பு பூஜை
ADDED :2299 days ago
கிருஷ்ணராயபுரம்: கோடாங்கிப்பட்டி பகவதியம்மன் பாம்பலம்மன் கோவிலில், ஆடி பூரம் முன்னிட்டு, சுவாமிக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலூர் அருகே, கோடாங்கிப்பட்டியில், பகவதியம்மன், பாம்பலம்மன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி பூரம் திருநாளை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின், வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.