கடலுார் சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2532 days ago
கடலுார்:கடலுார் சித்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கடலுார், பாதிரிக் குப்பம் சித்தி விநாயகர் கோவிலில் 3ம் ஆண்டு திருவிளக்கு பூஜை கடந்த 2ம் தேதி மாலை நடந்தது. விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, திரு விளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மூலவர் சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.