விருத்தாசலம் அருகே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சிக்கலய ஊர்வலம்
ADDED :2299 days ago
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சிக்கலயம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று (ஆக., 4ல்) காலை சித்தேரிக்குப்பம் குளத்தில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு செவ் வாடை பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோவிலில் கஞ்சிவார்த்தல் பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.