சோழவந்தான் திருவாலவாயநல்லுார் கருப்பணசுவாமி கோயில் ஆடி உற்சவம்
ADDED :2367 days ago
சோழவந்தான்:திருவாலவாயநல்லுார் சப்பாணி மந்தை கருப்பணசுவாமி கோயில் ஆடி உற்ஸ வம் ஜூலை 26 பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.ஆக., 2 ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜைநடந்தது.
ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டையடுத்து ஹரிஹரபுத்திர
அய்யனார் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று (ஆக., 4ல்)சுந்தரவள்ளி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.