மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் உழவாரப்பணி
ADDED :2367 days ago
மதுரை:மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் கோவை தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் உழவாரப் பணி நடந்தது.
இப்பேரவை தமிழகத்தின் தொன்மையான, கவனிக்கப்படாத சிறு கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்கிறது. 45க்கும் மேற்பட்ட கோயில்களில் பராமரிப்பு பணிகளை செய்துள்ளது. மதுரையில் நடந்த உழவாரப் பணியில் கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் பங்கேற்றனர். ஈஷா நிர்வாகி முரளி ஒருங்கிணைத்தார்.