அலங்காநல்லுார் அருகே கல்லணை சித்திவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2524 days ago
அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் அருகே கல்லணை சித்திவிநாயகர் கோயிலில் கும்பாபிஷே கம் நடந்தது.
இதையொட்டி முதல் நாள் கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (ஆக., 4ல்) அழகர்மலை நுாபுரகங்கை, காவிரி, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்களுக்கு சிவாச்சார்யார்கள் பூஜை களை செய்தனர். பின் தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.