ஷீர்டி சாய்பாபா பிரார்த்தனை தலத்தில் ராம நவமி சிறப்பு பூஜை!
ADDED :5038 days ago
சேலம்: ஷீர்டி சாய்பாபா பிரார்த்தனை தலத்தில், ராம நவமியை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம், முல்லைநகரில் ஷீர்டி சாய்பாபா பிரார்த்தனை தலம் மற்றும் தியான மண்டபம் உள்ளது. இங்கு ராம நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விஷ்ணு சகாஸ்ரநாமம், அனுமான் சாலீசா பாராயணம், பக்தி பாடல்கள், சாய் பஜன், சந்தனக்காப்பு, பஜன சம்பிரதாயப்படி திவ்ய நாமம் மற்றும் அன்னதானம் போன்ற நிகழச்சிகள் நடக்கிறது.