சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு: பக்தர்கள் வழிபாடு
ADDED :2254 days ago
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில், ஆடி பண்டிகையை முன்னிட்டு, நேற்று (ஆக., 5ல்) இரவு நடந்த சக்தி அழைப்பில் திரளாக பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். இன்று (ஆக., 6ல்) இரவு முதல் பொங்கல், மாவிளக்கு துவங்குவதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பண்டிகை கடந்த ஜூலை, 23 இரவு பூச்சாட்டுத லுடன் துவங்கி நடந்து வருகிறது.
தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடந்து வருகிறது. நேற்று (ஆக., 5ல்) இரவு சக்தி அழைப்பு நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று (ஆக., 6ல்) இரவு துவங்கி, மூன்று நாட்களுக்கு பொங்கல், மாவிளக்கு, உருளுதண்டம் நடக்கிறது