உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் பினாயூரில் எல்லையம்மன் கோவில் விழா கோலாகலம்

உத்திரமேரூர் பினாயூரில் எல்லையம்மன் கோவில் விழா கோலாகலம்

உத்திரமேரூர்:பினாயூரில், எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழா, நேற்று, (ஆக., 5ல்) கோலா கலமாக நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில், எல்லையம்மன் மற்றும் சந்தியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டிற்கான ஆடி திருவிழா, 1ம் தேதி, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர் ந்து, காலை மற்றும் மாலை நேரத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றன.நேற்று (ஆக., 5ல்) காலை, தீபாராதனையைத் தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு, எல்லையம்மன் கோவில் வளாகத்தில், பெண் பக்தர்கள், ஊரணி பொங்க லிட்டு, அம்மனுக்கு படையலிட்டனர்.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்த எல்லைஅம்மனை, பொதுமக்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !