முத்தியால்பேட்டை மூலஸ்தம்மனுக்கு ஆடி திருவிழா
ADDED :2252 days ago
முத்தியால்பேட்டை:முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவிலில், 19ம் ஆண்டு ஆடி திருவிழா, வெகு விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை கீழத்தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில், 19ம் ஆண்டு ஆடித்திருவிழா, நேற்று முன்தினம் (ஆக., 4ல்), வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, 2ம் தேதி, கசத்துமேடு பகுதி யில், அம்மன் ஊர்வலம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் (ஆக., 4ல்) காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, பகல், 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடைபெற்றது.இரவு, 8:00 மணிக்கு, மூலஸ் தம்மன் மலர் அலங்கார த்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார். அப்போது, வாண வேடிக்கை நடந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆர்.வி.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் செய்தனர்.