உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கரலிங்கம் கோவிலில் நாக பஞ்சமி பூஜை

தும்பைப்பட்டி சங்கரலிங்கம் கோவிலில் நாக பஞ்சமி பூஜை

மதுரை: தும்பைப்பட்டி,  சிவாலயபுரம், கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம்  சுவாமி,  சங்கர நாராயணனர் கோவிலில் நேற்று(5ம்தேதி) நாக பஞ்சமியை முன்னிட்டு,  நாகர் சுவாமிகளுக்கு  மஞ்சள்,  சந்தனம், பால்  அபிசேகம் மற்றும் சிறப்பு  அலங்கார வழிபாடு,  அர்ச்சனை நடைபெற்றது.  காலையில், நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், உள்ளிட்ட விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !