உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை: பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை: பக்தர்கள் தரிசனம்

சபரிமலை, சபரிமலையில் இன்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக அச்சன்கோயிலில் இருந்து நெற்கதிர்களுடன் பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்.

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறந்தது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார்.  தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது. ஆண்டில் முதல் போக சாகுபடியில் விளைந்த நெற்கதிர்களை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிப்பது நிறைபுத்தரிசி பூஜை.

இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து, நெய் அபிேஷகம் நடைபெற்றது. 5:30 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை தொடங்கியது. கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் நெற்கதிர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் மேல்சாந்தி அந்த நெற்கதிர் கட்டினை தலைமையில் சுமந்து கோயிலை வலம் வந்தார். பின்னர் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதற்கான நெற்கதிர்கள் கொல்லம் மாவட்டம் அச்சன்கோயில் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயலில் இருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்தும் எடுத்துவரப்பட்டது. இவற்றை எடுத்துக்கொண்டு முன்னாள் சபரிமலை மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி தலைமையில் 70 பேர் கொண்ட ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் குருவாயூர், பாம்புமேக்காடு, மலையாழப்புழா, எருமேலி, பம்பை கோயில்களில் நெற்கதிர்கள் கொடுத்து விட்டு நேற்று இரவு சன்னிதானம் வந்தனர். இன்று இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !