உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை

சிங்கம்புணரி, சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை நடந்தது. ஆடி தேர்பிறை பஞ்சமி நடசத்திரத்தன்று சக்தி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.


இந்தாண்டு சனிக்கிழமை இப்பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சித்தருக்கு அவரது இஷ்ட தேவதையான வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சக்தி பூஜை நடத்தப்பட்டது. விழாவில் சுவாமிக்கு அசைவ உணவு படையல் போடப்பட்டது.நிகழ்ச்சியில் சிங்கம்புணரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !