உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி திருவிழா

நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி திருவிழா

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், இன்று (ஆக., 7ல்) சுவாதி திருவிழா நடக்கிறது.

நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் ரோட்டில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு இன்று காலை, 10.00 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் பெருமாளுக்கு சிறப்பு வேள்வி நடக்கிறது. விழாவையொட்டி, பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும், நிறைவில் அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுவாதி திருநட்சத்திர திருவிழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !