’ஞானத்தை பாதிக்கும் அகங்காரம் அகற்றுங்கள்’
ADDED :2300 days ago
கோவை:கோவை, ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவ ஆன்மிக நிகழ்ச்சி ஜூலை, 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. ’பகவத் கீதை அத்தியாயம் 17’ எனும் தலைப்பில் நொச்சூர் வெங்கட்ராமன் கடந்த, 4 முதல் வரும், 10ம் தேதி வரை சொற்பொழிவாற்றுகிறார்.
நொச்சூர் வெங்கட்ராமன் நேற்று (ஆக., 6ல்)பேசுகையில், ”உலகத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு கொண்டி ருக்கும் நாம் மனத்துாய்மையுடன், அமைதியான வாழ்க்கை வாழ்ந்தால், நம்மை பார்த்து நாமே ஆச்சரியப்பட முடியும். நம்முடைய சொரூபம் என்ன என்பதை, முதலில் உணர வேண்டும். நான், எனக்கு எனும் எண்ணம் பிற எண்ணங்கள் போன்று இல்லை; அகந்தை உடையது. எனவே, நமது ஞானத்தை பாதிக்கும் நான், எனக்கு எனும் அகங்காரத்தை அகற்றினால் நன்றாக வாழலாம்,” என்றார்.