அவிநாசி, காமாட்சியம்மன் கோவிலில், நாகபஞ்சமி விழா கோலாகலம்
ADDED :2364 days ago
அவிநாசி:அவிநாசி, காமாட்சியம்மன் கோவிலில், நாகபஞ்சமி விழா, கோலாகலமாக நடந்தது.அவிநாசி, செங்காடு ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், நாகபஞ்சமி விழாக்குழு மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில், நாகபஞ்சமி விழா, 5ம் தேதி நடந்தது.
வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமை வகித்தார். பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் வேள்வி நடத்தினர்.பக்தர்கள், தங்கள் கரங்களாலேயே, நாகதேவதை க்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.