புவனகிரி அருகே பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு படையல் திருவிழா
ADDED :2253 days ago
புவனகிரி : புவனகிரி அருகே வடக்குத்திட்டை பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு படையல் திருவிழா நடந்தது.
புவனகிரி அருகே வடக்குத்திட்டை பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் படையல் திருவிழா நடத்தி பொங்கல் வைப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா நேற்று முன்தினம் (ஆக., 5ல்) நடந்தது.பல்வேறு பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டினர் சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடு களை குலதெய்வ வழிபாட்டினர் செய்திருந்தனர்.