புவனகிரியில் லலிதா சமஸ்கரநாம வேதபாராயண நிகழ்ச்சி
ADDED :2300 days ago
புவனகிரி : கீழ்புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, 100 வேத விர்ப்பன்னர்கள் பங்கேற்ற லலிதா சமஸ்கரநாம வேதபாராயண நிகழ்ச்சி நடந்தது.
கீழ்புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரர் கோவிலில் கடந்த 4ம் தேதி சென்னை வேதபா ராயண சமிதி குழு சார்பில், 100 வேத விர்ப்பன்னர்கள், பங்கேற்ற லலிதா சமஸ்கரநாம வேதபாராயண நிகழ்ச்சி, குழுத்தலைவர் ஹரிக்கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.அதனை தொடர்ந்து மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ரத்தின சுப்ரமணியன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.