தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆடிமுளைக்கொட்டு விழா
ADDED :2254 days ago
தேவகோட்டை:தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 29ல் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆடி வெள்ளியன்று பெண்கள் திருவிளக் கேற்றி விளக்கு பூஜை செய்தனர். முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.
சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ராம்நகர் அழகாபுரி நகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இரண்டாம் நாள் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. ஆறாம் நாள் பெண்கள் விளக்கேற்றி விளக்கு பூஜை செய்தனர். ஏழாம் நாள் பாலமுருகன் கோவிலில் இருந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரி தல் செய்து வழிபட்டனர்.