சிங்கம்புணரி அருகே சூலப்பிடாரி அம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா
ADDED :2254 days ago
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே ஐந்துநிலை நாடு எஸ்.வி.மங்கலம் சூலப்பிடாரி அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது.சூலக்கருப்பர், சூலப்பிடாரி அம்மன் என்று வழிபடப்படும் இக்கோவிலில் மேற்கூரை இல்லாமல் வெயிலிலும், மழையிலும் வீற்றிருப்பது இக்கோயிலின் சிறப்பு.
மேலும் சிலை வடிவம் இல்லாமல் வரலாற்று அமைப்பான நடுகல் அமைப்பில் இக்கோயில் வணங்கப்படுகிறது. இக்கோயிலில் ஆடி பொங்கல் விழா ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் அன்று தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்கிழமை பொங்கலிட்டு மூன்றாம் செவ்வாய் ஆன நேற்று (ஆக., 6ல்) கிராமத்தின் சார்பில் பொங்கலிட்டு ஆடு வெட்டி வழிபாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றன.