உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வீரஅழகர்கோவிலில் கொடியேற்றம்

மானாமதுரை வீரஅழகர்கோவிலில் கொடியேற்றம்

மானாமதுரை:மானாமதுரை வீரஅழகர்கோயில் ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா இன்று (ஆக., 7ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இந்தாண்டுக்கான விழா இன்று காலை 6:15 மணியிலிருந்து 7:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழா நாட்களின் போது சுவாமி ஹனுமார்,கருடன்,சேஷ,குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா வருவார். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 12ந் தேதி இரவு 7:00 மணிக்கும், தேரோட்டம் வரும் 15ந் தேதி 6:00 மணிக்கும் ,தீர்த்தவாரி 16 ந் தேதி நடைபெற உள்ளது.18ந் தேதி உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கோபிமாதவன்(எ)முத்துச்சாமி ஸ்தானீகர் பாபு மற்றும் தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சரவணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !