மந்தாரக்குப்பம் தேவி திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :2254 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்து டன் விழா துவங்கியது.தேவி மாரியம்மன் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று (ஆக., 6ல்) காலை 10:30 மணியளவில், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஆக., 6ல்) இரவு கணபதி ஹோமம் நடந்தது. வரும் 14ம் தேதி மாலை 4:00 மணிக்கு திருகல்யாண மும், 15ம் தேதி செடல், பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
தினசரி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.