உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

நெல்லிக்குப்பம்: வைடிபாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. நெல்லிக்குப்பம் வைடிபாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மாலை செடல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் மற்றும் 15 அடி நீளமான அலகு குத்தியும் பறவை அலகு குத்தியும் மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !