கீழக்கரை தர்காவில் கொடியேற்றம்
ADDED :2254 days ago
கீழக்கரை:கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்திற்குபாத்தியப்பட்ட மணல் மேடு மகான் கொந்தன் கருணை அப்பா தர்கா அமைந்துள்ளது. இங்கு 815ம் ஆண்டுகந்துாரி விழாவிற்கா கொடியேற்றம் நேற்று (ஆக., 6ல்) மாலை6:00 மணிக்கு நடந்தது உலக நன்மைக்காகவும்,அமைதி வேண்டியும் தர்காவில் மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டது.
வடக்குத்தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முகம்மதுதலைமை வகித்தார்.தர்கா நிர்வாகிஅப்துல் மஜீத், ஜமாஅத் துணைத்தலைவர் அயூப்கான், பொருளாளர் இப்ராகீம் அலி, செயலாளர் அன்வர் மைதீன்,துணைத்தலைவர் அப்துல் ரசாக்,இமாம் கலீல் இப்ராகீம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையினர்செய்திருந்தனர்.