விழுப்புரம் ராகவன்பேட்டையில் அய்யனாரப்பன் கோவிலில் திருவிழா
ADDED :2257 days ago
விழுப்புரம் : ராகவன்பேட்டை பூர்ண புஷ்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் ஆடிமாத திரு விழா நேற்று (ஆக., 6ல்) நடந்தது.
விழாவையொட்டி, நேற்று (ஆக., 6ல்) காலை மூலவர் அய்யனாரப்பன் மற்றும் உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கிராம பொதுமக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனையடுத்து, இரவு 9:00 மணியளவில் அய்யனாரப்பன், பூர்ண, புஷ்கலை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது.