வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :2257 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று காலை 8:00 மணிக்கு, லட்சுமி நாராயண சுக்த ேஹாமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, வைகுண்டவாச பெருமாள், ஜனகவல்லி தாயார் திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.