உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் பிரமாண்ட முருகன் சிலை அமைக்க முடிவு!

திருச்செந்தூரில் பிரமாண்ட முருகன் சிலை அமைக்க முடிவு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, திருச்செந்தூரில், பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்படவுள்ளதாக, கலெக்டர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வெள்ளி விழாவையொட்டி, மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் அனைத்திலும், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. கோவில்பட்டியில், ஹாக்கி மைதானம் உருவாக்கப்படவுள்ளது. மலேசியாவில் உள்ளது போல, மிக உயரமான பிரமாண்ட முருகன் சிலை, திருச்செந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, இங்கு கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே, கடற்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், பூங்காவும் அமைக்கப்படும். கோரம்பள்ளத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மணப்பாட்டில், பாரா கிளைடிங் பயிற்சி மையம் அமைக்கப்படும். மாவட்டத்தில் நீர்வழி விளையாட்டுகளுக்கு, முக்கியத்துவம் தரப்படும். இந்தாண்டு அக்டோபரில் நடக்கவுள்ள வெள்ளி விழா நிறைவு கொண்டாட்டத்திற்குள்ளாக, இப்பணிகள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கலெக்டர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !