கடலுார் திரவுபதியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
ADDED :2364 days ago
கடலுார்: கடலுார் அடுத்த பழையவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் பெற கூட்டு பிரார்த்தனை, 108 விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விஷ்ணு துர்கை அம்மனை வழிபட்டனர்.