உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’இறைவனோடு இரண்டற கலப்பதே சிறந்த பக்தி’

’இறைவனோடு இரண்டற கலப்பதே சிறந்த பக்தி’

அவிநாசி:அவிநாசி ஆன்மீக நண்பர்கள் குழு சார்பில், பக்தி தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.

அவிநாசி, குலாலர் மண்டபத்தில், திருவிளையாடற் புராண தொடர் சொற்பொழிவு, 5ம் தேதி துவங்கி நடந்துவருகிறது.இதில், தேச மங்கையற்கரசி பேசியதாவது:இந்த உலகம் ஒரு நாள் அழிந்து, மீண்டும் புதிய பிறப்பு எடுக்கும். சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மூலம் இந்த அழிவு நடக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறந்தவர்களின் ஆன்மாவுக்கு ஜாதி, மதம், இனம், மொழி என்பது கிடையாது. இறைவனோடு இரண்டற கலந்து பிரார்த்திப்பதே சிறந்த பக்தி. காதல் என்ற வார்த்தையை ஆழ்வார்களும், நாயன்மார்களும் புராணங்களில் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றைய தினம் இந்த வார் த்தையை கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது.

தானத்தில் சிறந்தது அன்னதானம். தனியாக ஒவ்வொருவரும் அன்னதானம் செய்ய முடியா விட்டாலும் பிறரோடு இணைந்த அன்னதானத்தில் பங்கு எடுப்பது புண்ணியத்தை பெற்றுத் தரும். வேத சூத்திர விளக்க உபதேசத்தை பெருமான் கொடுத்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !