காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
ADDED :2261 days ago
காரைக்கால்:காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது.
காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தின் 278ம் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் (ஆக., 6ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருட்தந்தை அந்தோணிராஜ், எருக்கூர் பங்குதந்தை சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலையில் திருப்பலி, மாலையில் சிறிய தேர் பவனி, நவநாள் திருப்பலி யும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 15ஆம் தேதி இரவு மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.