உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சப்த கன்னியர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

செஞ்சி சப்த கன்னியர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

செஞ்சி:செஞ்சி அடுத்த மேலாத்துார் சப்த கன்னியர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று (ஆக., 7ல்) நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு, புனித நீர், பிள்ளையார், திருமகள், நிலத்தேவர் வழிபாடும், புற்று மண் எடுத்தல், காப்பு அணிவித்தல் நடந்தது. அன்று இரவு 7:00 மணிக்கு மூர்த்திகளின் திருக்குடங்கள் யாகசாலையில் எழுந்தருளச் செய்யப் பட்டது. 8:00 மணிக்கு கன்னிமார் விநாயகர், முருகர், கிராம தேவதைகளுக்கு முதல் கால வேள்வி, 10:00 மணிக்கு திருவுருவச்சிலைகள் என்வகை மருந்து சாற்றுதல், கோபுர கலசம் நிறுவுதல் நடந்தது. நேற்று (ஆக., 7ல்) காலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், காப்பு அணிவித் தலும், 7:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 9:30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு, 9:50 மணி க்கு கன்னிமார் கோபுரம், மூலவர், விநாயகர், முருகர், மூலவர் பரிவார மூர்த்திகள் நன்னீராட்டு நடந்தது. 10:00 மணிக்கு திருமஞ்சனம் பேரொளி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !