நெட்டப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
நெட்டப்பாக்கம்:ஏம்பலம் முத்துமாரியம்மன், கங்கையம்மன் கோவிலில் 100ம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா நாளை நடக்கிறது.
இக்கோவிலில் 100ம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை 9 ம் தேதி காலை 9.00 மணிக்கு காவடி பூஜை, பகல் 12.00 மணிக்கு பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், 2.00 மணிக்கு சக்தி கரகம் சாமியார் குளத்திலிருந்து புறப்பட்டு வீதியுலாவும், மாலை 5.00 மணிக்கு பக்தர்கள் மார்பு மீது மஞ்சள் இடித்தல் தொடர்ந்து செடல் உற்சவம் நடக்கிறது.
வரும் 10ம் தேதி காலை 10.00 மணிக்கு திரவுபதி அம்மன் தெப்பல் உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 12ம் தேதி இரவு 8.00 மணி க்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கோவிந்தராசு, செயலர் ராமதாஸ், பொருளாளர் சுப்பராயன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.