நெட்டப்பாக்கம் மதுரை வீரனுக்கு சாகை வார்த்தல்
ADDED :2263 days ago
நெட்டப்பாக்கம்:நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று 7ல், நடந்தது.இதையொட்டி காலை 11.00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவை தொடர்ந்து பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3.00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. ஏரளமான பெண்கள் பொங்கல் வைத்து மதுரை வீரனை வழிபட்டனர்.