நெகமம் அருகே, வெள்ளையம்மனுக்கு குண்டம் திருவிழா
ADDED :2266 days ago
நெகமம்:நெகமம் அருகே, செட்டியக்காபாளையம் வெள்ளையம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.நெகமம் அருகே, செட்டியக்காபாளையம் வெள்ளை யம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் (ஆக., 6ல்) காலை, 7:00 மணிக்கு மூல கணபதி ஹோமம், ஆதிவிநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. கருப்பராயன் கோவிலில், உருவாரம் வைத்து வழிபாடு நடந்தது.தீர்த்த கிணற்றில் இருந்து சக்தி கும்பம் எடுத்து வந்து, குண்டம் திறக்கப் பட்டது. நேற்று (ஆக., 7ல்) காலை, 8:00 மணிக்கு, விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.