உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 63 நாயன்மார் ஊர்வலம்: ராசிபுரத்தில் கோலாகலம்

63 நாயன்மார் ஊர்வலம்: ராசிபுரத்தில் கோலாகலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் நடந்த, 63 நாயன்மார் திருவீதி உலாவில் சிவ பக்தர்கள் கலந்து கொண் டனர். ராசிபுரம், கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், ஆண்டு தோறும் அறுபத்து மூவர் பெருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா, கடந்த, 7ல் தொடங்கியது. நேற்று (ஆக., 8ல்) மாலை சிறப்பு பூஜை, அபிஷேகம், இரவு, 8:00 மணியளவில், 63 நாயன்மார் திருவீதி உலா தொடங்கியது.

63 நாயன்மார்களும், புஷ்ப அலங்காரத்தில் ஊர்வலம் வந்தனர். முன்னதாக புஷ்ப பல்லக்கில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவ பக்தர்கள், பல்வேறு வேடமணிந்து, ஆடி, பாடி ஊர்வலமாக வந்தனர். சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, சேலம் சாலை வழியாக வீதியுலா வந்தது. ஊர்வலம் நடந்த இடம் முழுவதும் மின் விளக்குகளும், ஆன்மிக கொடியுமாக நகர் முழுவதும் கோலாகலமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !