உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் 108 பால் குட ஊர்வலம்

மாரியம்மன் கோயிலில் 108 பால் குட ஊர்வலம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் மாரியம்மன் கோவில் ஆடி உற்சவத்தையொட்டி, 108 பால் குடம் ஊர்வலம் வந்தனர். விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், சிறப்பு அலங்காரம் நடந்து மகா தீபாராதனை நடந்தது. ஆடி உற்சவத்தையொட்டி, இன்று செடல் உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !