உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம்

ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம்

ஓசூர்: ஓசூர், முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரம், மாருதி நகர் பகுதியில் உள்ள முத்து மாரிய ம்மன் கோவிலில், 30ம் ஆண்டு உற்சவ விழா கடந்த, 4ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 5ல் அம்மனை ஆற்றில் இருந்து அழைத்து வருதல், காப்பு கட்டுதல், சக்தி பூஜை, மாலை, 6:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஆக., 9ல்) மதியம், 3:00 மணி க்கு ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகம், பால்குடம், அக்னி கரகம் மற்றும் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் பலர், முத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வல மாக சென்றனர். ஓசூர் நகராட்சி முன்னாள் தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கோவில் ஆலய கமிட்டி நிர்வாகிகள், பக்தர்களுக்கு வரவேற்பு அளித்தனர். திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (ஆக. 11) அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !