உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

காரைக்கால்:காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.காரைக்கால் சுந்தராம்பிகை உடனுறை கயிலாசநாதர் கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது. முன்னதாக கடந்த 23ம் தேதி பூர்ணாம்பிகை புஷ்கலாம்பிகை அய்யனாருக்கும், 24ம் தேதி கடைத்தெரு மாரியம்மன், 25ம் தேதி ஆற்றங்கரை உஜ்ஜையினி காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி மகா அபிஷேகம் நடந்தது.நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு அஸ்திர தேவர் உட்பட அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின், விநாயகர், சுப்ரமணியர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர் புறப்பாடு நடந்தது. நாளை முதல் தினந்தோறும் சாமி வீதி உலா நடக்கிறது. 4ம் தேதி தேர் திருவிழாவும், 7ம் தேதி தெப்ப திருவிழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !