உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் விழா

ஊத்துக்கோட்டை அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் விழா

ஊத்துக்கோட்டை:ஆடி மாதம், நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில் களில் நடந்த கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஊத்துக்கோட்டை, காவல் நிலையம் பின்புறம் உள்ள தெற்கு காவாங்கரையில் உள்ளது, பூங்காவனத்தம்மன் கோவில்.

இக்கோவிலில், ஆடி மாதம், நான்காவது, ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, கூழ் வார்த்தல் நிகழ் ச்சி நடந்தது. முன்னதாக, அங்குள்ள வீரபத்திரன் சுவாமி கோவிலில் இருந்து, பெண்கள், கூழ்பானையை சுமந்து சென்று, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின், கூழ் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.இரவு அம்மனுக்கு, இறைச்சி வகைகள் படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில், திரளான பக்தர்கள் அம்மனை வழிபட் டனர்.ஊத்துக்கோட்டை அங்காளம்மன், செல்லியம்மன், எல்லையம்மன், தாராட்சி கிராமத் தில் உள்ள செல்லியம்மன் உள்ளிட்ட இடங்களில், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

பெரியபாளையம், பவானியம்மன் கோவிலில், நான்காவது வார ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேப்ப இலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !