உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் கெங்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திண்டிவனம் கெங்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திண்டிவனம்: தில்லையாடி வள்ளியம்மை நகர் கெங்கையம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் 8ம் ஆண்டு கூழ்வார்த்தல், திருவிளக்கு பூஜை மற்றும் பால்குட அபிஷேக விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.

விழாவையொட்டி, 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில்
திரளான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு பால் குட அபிஷேகமும், 7:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மதியம் 1:30 மணிக்கு கூழ் வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !