உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை

தர்மபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை

தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில், 15ம் ஆண்டு வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, மாலை, 5:00 மணி க்கு, கணபதி மற்றும் வரலட்சுமி ஹோமங்கள், 6:00 மணிக்கு வரலட்சுமி பூஜை நடந்தது.

அப்போது மூலவர் - ஆதிலட்சுமி அலங்காரத்திலும், உற்சவர் - மஹாலட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !