உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாட்டின் மணி மகுடம் சைவ சித்தாந்தம்: பொன்னம்பல அடிகளார் பெருமிதம்

நாட்டின் மணி மகுடம் சைவ சித்தாந்தம்: பொன்னம்பல அடிகளார் பெருமிதம்

ஈரோடு: ”இந்திய நாட்டின் மணி மகுடம், சைவ சித்தாந்தம்,” என்று, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஈரோட்டில் பேசினார்.

திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை, ஆதின சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மைய த்தின், வெள்ளி விழா சிறப்பு மாநாடு, ஈரோட்டில் நேற்று (ஆக., 11ல்) நடந்தது. இதில் பங்கேற்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: உலகில் நல்லவைகளை மட்டுமே, சைவ சித்தாந்தம் கற்று கொடுத்து வருகிறது. ஆசையை துறந்தால் அனைத்தும் வசப்படும். காட்டா ற்று நீரை எதிர்த்து நீந்தும் வல்லமை பெற்ற மீன், தூண்டில் புழுவுக்காக தன் வாழ்க்கையை இழக்கிறது. அதுபோலத்தான் ஆசையும். அற்ப மகிழ்ச்சிக்காக, மனித குலம் வாழ்க்கையை தொலைத்து விடுகிறது. சைவ சித்தாந்த வகுப்புகள், அதுபோன்ற மாயைகளில் இருந்து, தற் காத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை கற்றுக் கொடுக்கிறது. இந்திய நாட்டுக்கு கிடைத்த, மணி மகுடம் என்றால் அது சைவ சித்தாந்தம் தான்.

அறிவியலை தாண்டி அறம் சார்ந்த பல பதிவுகள் இதில் உள்ளன. நம் முன்னோர் எதை செய் தாலும், அறம் சார்ந்து சித்தித்து செயல்பட்டனர். இதுபோன்ற நல்லவைகளை மட்டுமே சைவ சித்தாந்தம் போதிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். சிவனடியார்கள், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !