பெருமாள் – ஆண்டாள் மாலை மாற்றல்
ADDED :2289 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் – ஆண்டாள் மணக்கோலத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வருகிறார். நேற்று சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் ரெங்கமன்னார் திருக்கோலத்தில், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம் நடந்தது. அப்போது திருமண வரன் வேண்டி பலரும் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாலைகளை சாற்றி வழிபட்டனர். தொடர்ந்து இன்று மாலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் பவனி வருகிறார்.