குச்சனூர் கருப்பணசாமிக்கு மதுப்படையல்
ADDED :2261 days ago
சின்னமனூர்: தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடி சனி வார விழா ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஆக., 12ல்) அங்கு சோணை கருப்பணசாமி கோயில் பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய மது பாட்டில்கள் சுவாமி சன்னதியில் படையல் வைக்கப்பட்டன. மது மண்கலயத்தில் ஊற்றப்பட்டது. காணிக்கையாக வழங்கிய 43 ஆட்டுகிடா, 27 கோழிகளின் கறி விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.