திருப்போரூரில் பக்தர்கள் ஓய்வுக்கூடம், மண்டபம்
 திருப்போரூர்:திருப்போரூரில் கட்டப்பட்ட, திருமண மண்டபம், பக்தர்கள்  ஓய்வுக்கூடம், நீண்ட காலமாக திறக்கப்படாததால், பொதுமக்கள்  சிரமப்படுகின்றனர்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நெம்மேலி  சாலையில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டுள்ளது.அதே இடத்தில், 2.5 கோடி  ரூபாயில், ஏழை எளி யோருக்கு வசதிக்காக திருமண மண்டபம், தங்கும் அறைகள்,  சுற்றுச்சுவர் மற்றும் பார்க்கிங் வசதியோடு கட்டப்பட்டது.பணிகள் முடிந்து, மூன்று  ஆண்டுகள் ஆகியும், இன்னும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., - எம்.எல்.ஏ.,  இதயவர்மனிடம், ஓய்வுக்கூடம் மற்றும் திருமண மண்டபத்தை திறக்க வேண்டும்  என, பக்தர்கள் மனு அளித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் நடந்த சட்டசபை  கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ., இதயவர்மன், திருப்போரூரில் கட்டப்பட்டுள்ள  அறநிலையத் துறைக்கு சொந்தமான கட்டடங்களை திறக்க வேண்டும் என, கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 
இருப்பினும், பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட  ஓய்வுக்கூடம், திருமண மண்டபத்தை, அற நிலையத் துறை அதிகாரிகள்  திறக்கவில்லை.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது: விசேஷ முகூர்த்த  நாட்களில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களில், 20  திருமணங்களும், கந்தசுவாமி கோவிலில், 30க்கும் மேற்பட்ட பிரார் த்தனை  திருமணங்களும் நடக்கின்றன.திருமணத்திற்கு வரும் உறவினர்கள், தங்கும்  வசதி யின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே, மண்டபம், தங்கும் அறை,  ஓய்வுக்கூடங்களை திறந்தால் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.