உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேந்தமங்கலத்தில், 15ல் செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா

சேந்தமங்கலத்தில், 15ல் செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா  வரும், 15ல் நடக்கிறது. கடந்த, 6ல், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.  மறுநாள், கருப்பண்ண சுவாமி பூஜை, நேற்று (ஆக., 12ல்) கன்னிமார் சுவாமி பூஜை நடந்தது.  

இன்று (ஆக., 13ல்) காலை, 7:00 மணிக்கு, அரண்மனை பொங்கல் மற்றும் சக்தி அழைத்தல்; நாளை (ஆக., 14ல்) காலை, 7:00 மணிக்கு, ஊர் பொங்கல், மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.

வரும், 15ல், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. முக்கிய பிரமுர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !