உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் உடல் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ரிஷிவந்தியம் உடல் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள உடல்  மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டியும், மழை பெய்ய வேண்டியும்  ஊரணி பொங்கல் வைக்கும் விழா நடந்தது.

அதனையொட்டி, உற்சவர் மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கோவிலுக்குச் சென்று, பொங்கல் வைத்து வழிபட்டனர்.அதைத் தொடர்ந்து மணிமுக்தா ஆற்றில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஆக., 13ல்) மாலை 4:00 மணியளவில் சாகை வார்த்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !