செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2303 days ago
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ராமணர் கோவிலில் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.அதனையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சன மும், அலங்காரமும் செய்தனர். காலை 10:00 மணிக்கு 1,200 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.பூஜைக்கு, ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி தாளாளர் பூபதி தலைமை தாங்கினார்.
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பத்மநாபன் விளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.
வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். செஞ்சி விவசாய கூட்டுறவு சங்கத் தலைவர் ரங்கநாதன், தொழிலதிபர் கோபிநாத், ஆடிட்டர் தனசேகரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.